இலங்கையின் இராஜதந்திர

அதிகாரி ஹிமாலி அருணதிலக்கவுக்கு அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றம் ஒன்றினால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணாதிலகா தனது வீட்டுப் பணிப்பெண் பிரியங்கா தனரத்னவை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெடரல் நீதிமன்றம் அவருக்கு $117,028.80 அபராதம் விதித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த குறித்த பணியாளர்  2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கன்பரா வீட்டில் பணியாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹிமாலி அருணதிலக்க, தனது பணிப்பெண்ணுக்கு முறையாக பணம் செலுத்தவில்லை எனவும், அதற்கான அபராதத் தொகையை 60 நாட்களுக்குள் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிரியங்க தனரத்னவுக்கு 374,151.90 டொலர் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

ஹிமாலி அருணதிலக்க தற்போது ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி