மீண்டும் சிலிண்டர் கூட்டணியில்
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்திக் கூறியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பைசர் முஸ்தபாவுக்கு தேர்தலுக்கு முன்னர் கட்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
”இதனை ஒரு சதி என ஐக்கிய தேசியக்கட்சியினர் கூறுகின் றனர். இந்த விவகாரம் தொடர்பில் தேர்தலுக்கு முன் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. மேலும், பைசர் முஸ்தபாவின் பெயர் தேசிய பட்டியலிலும் இருந்தது.
எது எப்படியிருப்பினும் சிலிண்டருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.