(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
ஐக்கிய மக்கள் சக்தியின்
தேசியப்பட்டியல் எம்பியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை நியமிக்குமாறு தேர்தல் திணைக்களத்துக்கு இன்று (12) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்பீட முக்கியஸ்தர் ஒருவர் தமிழ் லீடருக்கு உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ளாமல் நான்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதைத் தடுத்து அக்கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (12) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த பின்னரே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி நிசாம் காரியப்பரின் பெயரையும் உள்வாங்கி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சற்று நேரத்துக்கு அறிவித்துள்ளது.