அரசாங்கத்துக்குச் சொந்தமான
லேக்ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படும் தினமின மற்றும் சிலுமின பத்திரிகைகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமின பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய மனோஜ் அபேதீர மற்றும் சிலுமின பத்திரிகையின் பதில் ஆசிரியராக கடமையாற்றிய ஷிரோமி அபேசிங்க ஆகியோர் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, தினமின பத்திரிகையின் ஆசிரியராக லங்காதீப பத்திரிகையின் பிரதி ஆசிரியர் பிரதீப் தசநாயக்கவும் சிலுமின பத்திரிகையின் ஆசிரியராக ஊடகவியலாளர் உதேனி சமன்குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.