புதிய ஜனநாயக முன்னணியின்
தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயர், முன்னணியின் பங்காளிக் கட்சிகளிடையே பேசப்படவில்லை என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்துக்கு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி சின்னத்தில் வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றை முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு வழங்குமாறு புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி ஷர்மிளா பெரேராவுக்கு அண்மையில் முன்னாள் அமைச்சர்கள் பலரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
நவம்பர் 20ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இணக்கப்பாடும் மற்றும் பரிந்துரையும் உள்ளடக்கப்பட்டுளது என்றார்.