நீண்ட தூர ரயில்களில்

ஆசனங்களை முன்பதிவு செய்து பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட குழுவினர், ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் தொலைபேசி இலக்கங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன்படி சம்பந்தப்பட்ட மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய முடியும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி