யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய காணொளி ஒன்று மீண்டும் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலை டாக்டரிடம் 'சேர்' என்று தன்னை அழைக்கும்படி அர்ச்சுனா கோருகிறார்.
யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தியிடம் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும்,தன்னை "சார்" என்று அழைக்குமாறும் அர்ச்சுனா கூறுகிறார்.
எவ்வாறாயினும், யாழ். வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் நடத்தை தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.