பொதுத் தேர்தலின்போது
புதிய ஜனநாயக முன்னணி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு கட்சியின் செயலாளர் ஆட்களை பரிந்துரைப்பது அரசியல் திருட்டு என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை நிரப்புவது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் கட்சித் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும்.
புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயரை கட்சியின் செயலாளர் நேற்று (10) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்தமைக்கு பதிலளிக்கும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.