சபாநாயகர் அசோக ரன்வல

தமது பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் மாணவராக இருந்ததில்லை என்பதை ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

போலியான கலாநிதி பட்டத்தை காட்டுவது பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது.

முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று (10) விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை பாராளுமன்றம் ஆசியாவின் முதலாவது பாராளுமன்றம் அங்கு என்ன நடக்கிறது என்பதை முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

எனவே, இலங்கை சபாநாயகரின் கலாநிதி பட்டத்தின் குற்றச்சாட்டுகள் நாட்டை அவமதிக்கும் செயலாகும் என தெரிவித்த முன்னாள் அமைச்சர், சபாநாயகர் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

WhatsApp Image 2024 12 10 at 2.31.41 PM 1

கம்பஹா மாவட்டத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியினால் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட தேர்தல் துண்டுப் பிரசுரங்களில் தற்போதைய சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை கற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இதன்படி கம்பஹா மாவட்ட மக்களும் முழு நாட்டினதும் வாக்காளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இந்நிலையில், மற்றைய தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் கல்வித் தகுதி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. "இதே கட்சியின் மற்றொரு எம்பி சமர்ப்பித்த போலி கல்வித் தகுதிகள் பற்றிய தகவல்களை நாங்கள் பெற்றுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி