முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோருக்கே அவர் அழைத்து பேசியுள்ளார்.
தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது எம்.பி.க்களின் கல்வித் தகமைகளை ஆராய தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தின் அதியுயர் பதவியான சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரின் கல்வித் தகைமை தொடர்பில் இன்றைய நாட்களில் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் குரல் எழுப்பி தலையிட வேண்டுமென சம்பந்தப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.