போதகர் ஜெரோம் பெர்னாண்டோ
கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் அல்ல என்றும் எனவே, இவரை நம்பி திருச்சபை உறுப்பினர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.
"கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமான அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாத ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பிஷப் அல்ல.
எனவே இதுபோன்ற தகவல்களால் ஏமாற வேண்டாம் எனஎங்கள் கத்தோலிக்க விசுவாசிகளை கேட்டுக் கொள்கிறோம்" என்று ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் தந்தை அந்தனி ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.