சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல
கலாநிதி பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கற்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன் அவ்வாறான ஒருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
கொழும்பு அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22ஆவது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை இழிவுபடுத்தியுள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளதுடன் அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.