புதிய ஜனநாயக முன்னணியின்
எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் உறுப்பினராக முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியது.
அதில் ஒன்றை ரவி கருணாநாயக்க பெற்றுக் கொண்டார்.
எஞ்சிய ஆசனத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு புதிய ஜனநாயக முன்னணியின் மூன்று முக்கிய பங்குதாரர்கள் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.