சபாநாயகர் அசோக ரன்வல
தனது கல்வித் தகைமை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
இதன்படி, இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை தொடர்பில் அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொய்யான குற்றச்சாட்டாக இருந்தாலும. நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.