புதிய பாராளுமன்றத்தின்
புதிய சபாநாயகர் அசோக ரன்வலவின் பெயர், அவர் நியமனம் செய்யப்பட்டதிலிருந்து 'டாக்டர் அசோக சபுமல் ரன்வல' என பாராளுமன்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவரது பெயருக்கு முன்னால் உள்ள டாக்டர் என்ற பட்டம் நாடாளுமன்ற இணையதளத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சபாநாயகர் அசோகா ரங்வலவின் டாக்டர் பட்டம் இனி செல்லாது என நாடாளுமன்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் சமீபகாலமாக பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருந்த நிலையில் அதற்கு அவர் பதில் கூறாமல் தவிர்த்தமை தெரிந்ததே.