ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்கா தடைகளையும் விசா வசதித் தடைகளையும் விதித்துள்ளது.
எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதில் கபில சந்திரசேன இலஞ்சம் பெற்றதாகவும், உதயங்க வீரதுங்க இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்வதில் ஊழல் மோசடி திட்டத்தை முன்னெடுத்ததாகவும் குற்றம் சுமத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் இருவரும் மற்றும் அவர்களது உறவினர்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.