வடக்கு ஆவா' கும்பலின் தலைவர்
ஒருவர் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான பிரசன்ன நல்லலிங்கம் என்ற சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் 'ஆவா கும்பல்' தலைவனாக செயற்பட்டதாக கூறப்படுகிறது.
இவர் கொலை, கொள்ளை, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகளில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வருடம் மார்ச் மாதம் இளைஞரை ஒருவரைக் கொன்ற சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் இவர் எனவும் அவரைக் கைது செய்ய இலங்கை அதிகாரிகள் தேடி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று பின்னர் கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் பிரான்ஸுக்கு குடிபெயர்ந்த சந்தேக நபர், அந்நாட்டிலும் 'அதேபோன்ற கும்பலை உருவாக்கி' மோதல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸில் இடம்பெற்ற இவ்வாறான மோதலில் இளைஞர். ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்தமை தொடர்பிலேயே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.