யாழ்.மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதி பெண்ணொருவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணுக்கு 79 வயது.
கொழும்பு - புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.