கம்பஹா - தம்மிட்ட கௌதங்கஹா
பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த (39) ஒருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்மிட்ட வீதிப் பகுதியில் நேற்று (8) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மகேவிட பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.