(பாறுக் ஷிஹான்)
வெள்ள அனர்த்தத்தினால்
பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சேதமடைந்த வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேறறு (08) நேரில் சென்று பார்வையிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வட்டை விதானைமார் ஆகியோரிடம் இது தொடர்பில கேட்டறிந்ததுடன் சேதமடைந்த வீதிகளை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
உரிய அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு விவசாயிகளின் பிரச்சினைக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்குமாறும் வேண்டிக் கொண்டார்.