(பாறுக் ஷிஹான்)

பாராளுமன்ற தேர்தலில்

ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை  அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்த 2024  பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்  அஹமட் லெப்பை  அன்சார் (45) என்பவரின்   வீட்டின் மீது கடந்த 2024.11.30 இரவு  கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 2024.12.01 ஆந்திகதி அன்று பாதிக்கப்பட்டவரால் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது தாக்குதல் இடம்பெற்ற அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உபட்ட வொலிவேரியன் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வேட்பாளர் மருதூர் அன்சார் தனக்கு அண்மைக் காலமாக  இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்படுதாகவும் பின்னர் இவ்வாறு வீட்டின் மீது மேற்கொண்ட கழிவு ஒயில் தாக்குதலில் வீட்டின் நுழைவாயில் உட்பட சுவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இது தவிர  முகநூலில் சில தவறான விடயங்களை பதிவிட்டு சிலர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வந்ததாகவும் இதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.  

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் கல்முனை மாநகர சபையில் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி