சுஜீவ ருவன்குமார அல்லது

லொக்குபெட்டி என்பவர் இன்னும் பெலாரஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய பதவியை பொறுப்பேற்ற பின்னர் கந்தளாயில் நடைபெற்ற முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
லொக்கு  பெட்டி அல்லது சுஜீவ ருவன்குமார பெலாரஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டதாகவும் அதனைக் கொண்டாடும் வகையில் பல விருந்துகள் நடத்தப்பட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. 
 
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெலாரஸின் சர்வதேச பொலிஸ் பிரிவு ஊடாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சந்தேகநபர் இன்னும் விளக்கமறியலில் இருப்பதாகவும், அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும், நாடு கடத்தல் சட்டத்தின் கீழ், அவரை இலங்கைக்கு கொண்டு வரவுள்ளதாகவும் நேற்று எமக்குத் தெரிவித்தனர் எனக் கூறினார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி