(அபு அலா)
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கான
புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டது.
அதற்கமைவாக, விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த எம்.எம்.நஸீர் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்த இஷட்.ஏ.எம்.பைஷல் முதலமைச்சின் செயலாளராகவும், ஆளுநர் செயலக செயலாளராக கடமையற்றி வந்த எல்.பி.மதநாயக்க சுகாதார அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக் க விவசாய அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையற்றி வந்த எம்.கோபாலரத்ணம் பேரவைச் செயலாளராகவும், கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த ஜே.லியாக்கத்தலி மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் யாரும் நியமிக்கப்படவில்லை.
புதிய அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (09) தங்களின் அமைச்சுக்களின் கடமைகளை பொறுப்பேற்கும்படி சகல செயலாளர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பணிப்புரை விடுத்துள்ளார்