கடந்த அரசாங்கத்தின்போது
மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணி எதிர்வரும் வார இறுதியில் விரிவான அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.
உரிய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் முறை தொடர்பில் அந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்படவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே புதிய ஜனநாயக முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது.
பிமல் ரத்நாயக்க கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.