கடந்த பொதுத் தேர்தலின்
இறுதி முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர்) இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளைக் கொண்டுள்ளது.
தமது கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஒன்று வழங்கப்பட வேண்டுமென மக்கள் ஐக்கிய முன்னணி வலியுறுத்தி வருகிறது.
ரவி கருணாநாயக்க தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நியமனம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக சர்ச்சையான சூழ்நிலை உருவாகியுள்ளது.
எவ்வாறாயினும், எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் எம்.பி.க்கு புதிய ஜனநாயகக் கட்சியின் கூட்டுக் கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் ஐக்கிய முன்னணி டிசம்பர் 03 ஆம் திகதி மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் சித்ராணி நாணயக்காரவுக்கு அனுப்பிய கடிதத்தில் கோரியுள்ளது.