இரத்தினபுரி, கெடவல பகுதியில்
யுவதி ஒருவர் தடியால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி பகுதியில் வசித்த 23 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி ஒருவருடன் நீண்ட நாட்களாக காதல் உறவில் இருந்துள்ளார். நேற்று (04) இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபமடைந்த காதலன் தனது காதலியை தடியால் தாக்கியுள்ளார்.
தாக்குதலால் படுகாயமடைந்த காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.