ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கொட்டிகாவத்தையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கைது செய்ததாக கூறப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்வுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பியமைக்காக ரேணுகா பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.