250க்கும் அதிகமான உயிர்களை
பலிகொண்ட 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் தன்னிடம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றிய அவர், 2019 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரசாங்கம் முழு விசாரணை நடத்த வேண்டும்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இந்த அரசாங்கத்துக்கு பெரும் பொறுப்பு உள்ளது. இது தொடர்பாக பிள்ளையானிடம் விசாரணை நடத்தப்பட்டதைக் கண்டோம். அதைத் தாண்டி, யாரை கைது செய்வது என்று நாங்கள் சொல்லப் போவதில்லை. இது பொலிஸ் பிரச்சினை. எவ்வாறாயினும் இந்தத் தாக்குதல் குறித்த கூடுதல் தகவல்கள் எங்களிடம் உள்ளன.
இது குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளேன். பாதுகாப்பு அமைச்சரும் இருக்கிறார். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். திரிபொலி படைப்பிரிவு பற்றி நாங்கள் பாராளுமன்றத்தில் நிறைய விவாதித்துள்ளோம். மேலும் ஆதாரங்களை பெற பல குழுக்களை ஒருங்கிணைத்து வருகிறோம்” என்றார்.