வளிமண்டலவியல் திணைக்களத்தின்
உத்தியோகபூர்வ இணையதளம் மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அதனை மீளமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகக் குறுகிய காலத்தில் இணையதளம் ஹேக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக நவம்பர் 12ஆம் திகத ஹேக் செய்யப்பட்டது.
இதேவேளை, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகின்றன.
ஏனைய பிரதேசங்களில் மழையற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.