தேர்தல் மேடைகளில் தற்போதைய

அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு நீங்கள் கூறிய  விடயங்களைச் செய்யும் போது அது மக்கள் சார்பான, மக்களுக்கு சாதகமாக அமைந்தால் எதிர்க்கட்சியின் ஆதரவை அதற்குப் பெற்றுத் தருவோம். நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான திட்டங்களுக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.

அவ்வாறே, நாட்டுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை எதிர்ப்போம். அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவோம், அதற்கான மாற்று வேலைத்திட்டங்களையும் முன்வைப்போம். இது தான் எமது கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்றைய (03) பாராளுமன்ற சபை அமர்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்..

தற்போதைய அரசாங்கம், தேர்தல் மேடைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறியது. ஆனால் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தற்போது பயன்படுத்தி வருகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளில் ஈடுபடுவது நியாயமான செயலல்ல. தற்போதைய அரசாங்கம் பெரும் மக்கள் ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையின் கூடிய ஆதரவு கிடைத்தது. தற்போது நீக்குவோம் என சொல்லப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சமூக ஊடக ஆர்வலர்களை அடக்குமுறைக்குட்படுத்துகின்றனர்.

சொன்னதை செய்யும் அரசாங்கமாக இருந்தால் இந்த அடக்குமுறையை நிறுத்த வேண்டும். அரசாங்கம் நீக்குவதாக கூறிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சமூக வலைதள ஆர்வலர்களை கைது செய்தாலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை அவ்வாறு கைது செய்ய முடியாது என கனம் நீதிபதிகள் கூட கூறியுள்ளனர். அவ்வாறே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் யாரையெல்லாம் கைது செய்யலாம் என்பது குறித்தும் இந்த அரசாங்கத்துக்கு அவர்கள் பாடமும் புகட்டியுள்ளனர் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி