அநுராதபுரம் மற்றும் வவுனியா

மாவட்டங்களில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் - ஓயாமடுவ - பண்டாரகம பிரதேசத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஓயாமடு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அவர் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, வவுனியா - ஓமந்த பிரதேசத்தில் 45 வயதுடைய நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக கெப் வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் இந்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் வந்த  கெப் வண்டியுடன் வவுனியா பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஓமந்த பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி