எதிர்கட்சியினரைப் போன்று
பொய்யை பரப்பக்கூடிய வேறு எந்தக் கட்சியும் இல்லை என தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
தமக்கான தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கூட நியமிக்க முடியாத பலமற்ற எதிர்க்கட்சிகள் மிகச் சிறிய விடயத்தை முன்னிறுத்தி சில தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதனை இரண்டு நாட்களில் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.