அம்பாரை, காரைதீவு - மாவடிப்பள்ளி

பகுதியில், உழவு இயந்திரத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்குண்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஞாயிற்றுக்கிழமை (01) நேரில் சென்று அனுதாபங்களை தெரிவித்தார்.

469165781 1129039481902502 4647584692299213496 n

சம்மாந்துறையைச் சேர்ந்த 06 மதரஸா மாணவர்கள், சாரதி மற்றும் அவர்களுடன் பயணித்த மேலும் ஒரு நபர் உட்பட உயிர்நீத்த 08 பேர்களின் ஜனாஸா வீடுகளுக்கும் சென்று, குடும்ப உறுப்பினர்களை சந்தித்து, தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.
 
469022449 1129038461902604 576454829451349917 n
 
இதன்போது, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி