கல்வி கலாசார அமைச்சுக்கு
முன்பாக போராட்டம் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதிவான் கமல் விஜேசிறி உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இணை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின்போது நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
சந்தேக நபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.