நாட்டின் சில பகுதிகளில்
தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தளை மாவட்டத்தில் தேங்காய் ஒன்று 200 ரூபா முதல் 230 இடையே விலையில் விற்கப்படுகிறது.
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தேங்காய் விலை உயர்ந்துள்ளதாக சில்லற வியாபாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தேங்காய்த் விற்பனையாளர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளமை குறித்து நுகர்வோர் கவலை தெரிவித்துள்ளனர்.
விற்பனைக்காக வழங்கப்படும் தேங்காய்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலைக்கு நுகர்வோர் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.