நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த
நிலைமை காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் இன்று (29) காலை 6.00 மணிக்கு வெளியிட்ட புதுப்பிப்பின் படி, ஒருவரைக் காணவில்லை மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் 24 மாவட்டங்களில் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து 41,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
102 வீடுகள் முழுமையாகவும் 2,096 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.