கல்கிஸை ஹோட்டலில்
நடைபெற்ற ABBA நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
டெய்லி மிரர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின்போது இது குறித்து கருத்து கேட்டபோது, “உண்மையில், நான் இதைப் பற்றி பேச விரும்பவில்லை. தோற்கடிக்கப்பட்ட சக்திகள் எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்ள முயல்கின்றன.
கல்கிஸை ஹோட்டல் இதனை ஏற்பாடு செய்திருந்தது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். கட்சியில் இருந்தவர்களும் அழைக்கப்பட்டனர்.
ஒரு நிறுவனத்திடம் இருந்து ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தால், அதில் கலந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். திருமணத்துக்கான அழைப்பிதழ் வந்தால், நீங்கள் அதில் பங்கேற்கிறீர்கள்தானே?
எங்களுக்காக ஒரு மேசை ஒதுக்கப்பட்டிருந்தது. டிக்கெட்டின் விலை ரூ.50,000 என்பது உண்மைதான். ரூ.30,000, 15,000 மற்றும் 7,500 விலையிலும் டிக்கெட்டுகள் இருந்தன. அதில் கலந்து கொண்டு இரசித்தோம் என்று தெரிவித்துள்ளார்.