(எச்.எம்.எம்.பர்ஸான்)
பொலன்னறுவை - மன்னம்பிட்டி
வழியான போக்குவரத்து இன்று (29) வழமைக்குத் திரும்பியுள்ளதாக திம்புலாகலை பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தெரிவித்துள்ளார்.
கடும் மழை காரணமாக மன்னம்பிட்டி பிரதான பாதையை குறுக்கறுத்து வெள்ளநீர் சென்றதால் மட்டக்களப்பு - கொழும்பு போக்குவரத்து சில நாட்களாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளநீர் குறித்த பகுதியில் வடிந்தோடியுள்ளதால் அவ் வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.