(பாறுக் ஷிஹான்)
வெள்ள நீரில் சிக்கி மரணமடைந்த
மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்வுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் இவ்வாறு வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மத்ரஸாவில் கல்வி கற்று மரணமடைந்த மாணவர்களின் மறுவாழ்வுககாக துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டது.
இம்மாணவர்களின் பிரிவின் காரணமாக துக்கத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் சமூக நலன் விரும்பிகளால் வெள்ளைக் கொடிகள் கட்டி பறக்கவிடப்பட்டுள்ளன்
இன்றைய தினம்(29) வெள்ளிக் கிழமை நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக் கூடிய அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் இடம்பெறக் கூடிய குத்பாக்களிலும் ஷஹீதுகளுடைய அந்தஸ்து தொடர்பாக குத்பா உரை நிகழ்த்தப்பட இருப்பதுடன் ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து மரணமடைந்த மாணவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதோடு அதனைத் தொடர்ந்து விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.