ஐக்கிய மக்கள் சக்தியின்
எஞ்சியுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு அடுத்த வாரத்துக்குள் உரியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கட்சியின் பொதுச் செயலாளர் தற்போது வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல மேலும் தெரிவித்தார்.