5,000 ரூபா பெறுமதியான
பால் மா பொதிகளைத் திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருடன் திருடப்பட்ட இரண்டு பால் மா பொதிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குருதுவத்தை வோர்ட் பிளேஸில் உள்ள பல்பொருள் அங்காடியில் இரண்டு குழந்தைப் பால் மா பொதிகளைத் திருடிச் சென்ற பெண் ஒருவரைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிடிக்க முற்பட்டபோது அவர் கற்களை வீசித் தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான நிலைமை தோன்றியது.
இது தொடர்பில் குருதுவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய வெல்லம்பிட்டிய மற்றும் கேகாலை பிரதேசங்களில் இரண்டு முகவரிகளைக் கொண்டவராவார்.