(பாறுக் ஷிஹான்)
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட
உழவு இயந்திரத்தில் காணாமல் போனவர்களில் இதுவரை 7 பேரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறை பிரதேசத்துக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை காணாமல் போயினர்.
பின்னர் அன்றே மாலை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 5 மாணவர்கள் உயிருடன் மீட்புப் குழு தேடுதல்போது காப்பாற்றப்பட்டனர்.
பின்னர் சீரற்ற காலநிலைமை மற்றும் இருள் காரணமாக மீட்பு பணிகள் மறுநாள் புதன்கிழமை (27) ஆரம்பமாகி நிலையில் 4 மாணவர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்டவர்களில் முகமட் ஜெசில் முகமட் சாதீர், அப்னான் , பாறுக் முகமது நாஸிக் , சஹ்ரான் ஆகியோரர் உள்ளடங்குவர்.
அடுத்து வியாழக்கிழமை மூன்றாவது நாளான இன்று (28) 3 ஜனாஸாக்கள் மீட்கப்பட்டன. மாணவனான அலியார் முகமது யாசீன், உழவு இயந்திர சாரதி உதுமாலெப்பை முகமது அகீத் பொதுமகன் கல்முனை புகை பரிசோதனை நிலைய ஊழியர் அஸ்மீர் ஆகியோரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டன.
கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்துகுள்ளானது.