மருதமுனை பிரதேசத்தில் சீரற்ற
காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலமைகளை அறிந்து கொள்வதற்காக கள பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேற்று (27) அங்கு சென்றிருந்தார்.
இதன்போது, வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தமையினால் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்தார்.
கிராம சேவகர்கள் ஊடாக முறையான பதிவுகளை மேற்கோண்டு அவர்களுக்கான அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை கண்கானித்ததுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
