மாதிவெலவில் அமைந்துள்ள
பாராளுமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் குடியேறுவதற்காக சுமார் 80 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
அவர்களில் 60 பேர் தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களாவர்.
ஏழு முன்னாள் எம்பிக்கள் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்புகளை விட்டு வெளியேறாமல் இன்னும் அங்கேயே தங்கியுள்ளனர், அவர்களை விரைவில் வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.
புதிய எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வீடுகளை ஒதுக்கும் பணி எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.