(க.கிஷாந்தன்)

சீரற்ற காலநிலையால்

நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மாலை 4 மணி வரை நிலவரப்படி நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக 147 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 75 குடும்பங்களைச் சேர்ந்த 298 பேர் 7 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா, கந்தபளை கோட்லோட்ஜ் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 37 குடும்பங்களைச் சேர்ந்த 161 பேர் குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சமர்ஹில் பாடசாலையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

03

மேலும், கொங்கோடியா தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் கோவிலில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை குருதுஓயா அல்மா பாலர் பாடசாலையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும், பண்டிதாயகும்புர பாடசாலையில் உள்ள பாதுகாப்பான நிலையத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும் தங்கியுள்ளனர்.

மேலும், கொத்மலை டன்சினன் கொரெஞ்சி பாடசாலையில் உள்ள பாதுகாப்பான இடத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் தங்கியுள்ளனர்.

ஹங்குராங்கெத்த திகலஹின்ன சனசமூக மண்டபம் மற்றும் ஹோப் மத்திய பிரிவு தோட்டக் கட்டிடத்தில் 02 பாதுகாப்பான நிலையங்களும் திகலஹின்ன சனசமூக மண்டபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் ஹோப் மத்திய பிரிவு தோட்டக் கட்டிடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 08 பேரும் தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி