டான் பிரியசாத் மற்றும் மஹிந்த

கஹந்தகம உட்பட மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அரகல போராட்டத்தின்போது கோட்டாகம தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் போதே நீதிவான் இவர்களுக்குப் பிடியாணைகளை பிறப்பித்துள்ளார்.
 
சந்தேக நபர்கள் மூவரும் இன்று (27)  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
 
அவர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து டான் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி பிடியாணை பிறப்பித்துள்ளார்.
 
இந்த வழக்கு மார்ச் 26, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி