வாக்குமூலம் வழங்குவதற்காக

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று (26) சென்றிருந்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக கடமையாற்றிய போது, ​​றோயல் பார்க் கொலை வழக்கின் சந்தேக நபருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
 
சந்தேக நபரை விடுவிப்பதற்காக இலஞ்சம் பெற்றதாக நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் வாக்குமூலம் வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டுள்ளார்.
 
2005 ஆம் ஆண்டு இராஜகிரிய றோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவதி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
 
மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 2016 மே 17 அன்று மன்னிப்பு வழங்கப்பட்டதோடு, தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
 
அக்டோபர் 30, 2019 அன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை ஆயுள் தண்டனையிலிருந்து விடுவித்து, அவருக்கு மன்னிப்பு வழங்கினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி