களனி கங்கையின் நீர்மட்டம்
அதிகரித்து வருவதன் காரணமாக. சீதாவக்கை,தொம்பே, ஹோமாகம, கடுவெல பியகமை, கொலன்னாவை, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளிலுள்ள தாழ்நில பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலவும் அசாதாரண காலநிலையின் பாதிப்புகள் குறித்து தமிழ் மொழி மூலம் அறிவிக்கவும் அவசர ஒத்துழைப்புகளை கோரவும் 107 என்ற விசேட அவசர அழைப்பு இலக்கத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் கீழுள்ள நீர்தேக்கங்களின் பொறியிலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான விடுமுறை உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.