நாடாளுமன்றத்தின் மொத்த

உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும்.

இவர்களில் நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களில் சுமார் 150 பேர் புதிய எம்.பி.க்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட 146 பேரும் முதன்முறையாக பாராளுமன்றம் செல்லும் பிரதிநிதிகள் என்பது விசேட அம்சமாகும்.

தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து பெரும்பான்மையான எம்.பி.க்களே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி மாவட்ட அளவில் 141 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், அவர்களில் 130 பேர் புதிய எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் 35 எம்.பிக்களில் 8 பேர் புதிய எம்.பி.க்கள் மற்றும் 27 எம்.பி.க்கள் முன்பு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இந்த ஆண்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களில் மூவர் புதிய உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இந்த வருடம் பாராளுமன்றத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்றே அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தெரிவான ஒருவரும் புதியவரே.

இவர்கள் தவிர சர்வசன அதிகாரம் கட்சியிலிருந்து தேசியப்பட்டியல். ஊடாக தெரிவான திலீத் ஜயவீரவும் நாடாளுமன்றத்துக்குப் புதியவரே.

எவ்வாறாயினும், புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மூவரும் முன்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள்.

பாராளுமன்றத்துக்கு 29 தேசியப் பட்டியல் பதவிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.க்களின் எண்ணிக்கை 150ஐ  தாண்டலாம் எனக் கூறப்படுகிறது.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி