பல்லாயிரக்கணக்கான மக்கள்

அடைமழையில் நனைந்துகொண்டு பொலன்னறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலன்னறுவையில் இருந்து பெற்றுக் கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது.

பொலன்னறுவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 
 
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
 
பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை புதிய திசைக்கு அனுப்பி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நாட்டில் இயல்புநிலையை பேணிவந்து மக்களுக்கு அவசியமான நிவாரணங்களையும் நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான திட்டங்களையும் வகுத்துக்கொண்டு மூவரைக் கொண்ட அமைச்சரவை இயங்கிவருகிறது. 
 
நவம்பர் 14 ஆம் திகதிய வெற்றிக்குப் பின்னர் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள கொள்கை வெளியீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். 
 
ஜனாதிபதித் தேர்தல் மேடையில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருந்த பாசறையில் இருந்து என்ன கோரினார்கள்? பௌத்த பிக்குமார்களுக்கு அன்னதானம் கிடைக்கமாட்டாது, பௌர்ணமி தினத்தை இல்லாதொழிப்பதை உள்ளிட்ட பல விடயங்களை கூறினார்கள். அவையனைத்துமே பொய்யான புனைகதைகள் என்பது கடந்த ஒரு மாத காலத்துக்குள் நிரூபிக்கப்பட்டுவிட்டது. 
 
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு தற்போது ஒரு கூட்டத்தைக் கூட நடத்த முடியாமல் போயுள்ளது. 
 
இந்த பொதுத் தேர்தல் எந்தவிதமான போட்டியும் இல்லாமல் சோர்ந்துபோன ஒரு தேர்தல் என சிலர் கூறுகிறார்கள். எனினும், இந்த தேர்தலில் இலங்கை வரலாற்றின் மிகவும் தனித்துவமான வெற்றியை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுப்பது உறுதியானதாகும். கடந்த பாராளுமன்றம் பற்றி மக்கள் மத்தியில் எதிர்ப்பே நிலவியது. தங்கக் கட்டிகளை கடத்தி வந்து சுங்கத்தில் அகப்பட்டவர்கள் அண்மையில் பாராளுமன்றத்திற்கு வந்து கையை உயர்த்தினார்கள்.
 
அதைப்போலவே, அங்குமிங்கும் கட்சிதாவி இறுதியில் எங்கே இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடியாத திரிபு நிலை உருவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பள்ளிப்பிள்ளைகள் பாராளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தளவிற்கு அருவருப்பு நிலைக்கு உள்ளாகியிருந்த பாராளுமன்றத்தைக் கலைத்து மக்களுக்கு வாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம். 
 
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் என்றார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி